உள்ளூர் செய்திகள்

நுகர்வோர் தின விழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பெரியகருப்பன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரேசன் கடையில் கைரேகை சிரமத்தை தவிர்க்க கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ளப்படும்- அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

Published On 2023-09-08 11:23 IST   |   Update On 2023-09-08 11:23:00 IST
  • திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
  • சிரமங்களை தவிர்க்க விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். விழாவில் 2182 பயனாளிகளுக்கு ரூ.14.56 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை ஆகியவற்றை அமை ச்சர்கள் பெரிய கருப்பன், இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 15,06,189 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக த்தில் 26,261 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,124 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 36,405 நியாயவிலைக் கடைகள் உள்ளன.

மேலும் நியாயவிலைக்க டைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில் விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகததில் சுமார் 3.50 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

நியாய விலைக்கடைகளி ல் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் எந்திரம் பொருத்தப்பட்ட அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்ய ப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 31,000 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

நுகர்வோர் தொடர்பான விழாக்கள், போட்டிகள், பரிசுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட படைப்பாற்றலின் வெளி ப்பாடாக அமைந்துள்ள நிலையில், மாணவ-மாணவிகள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பெருவாரியாக கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்கான விவரங்கள் திரட்டுகையில், நுகர்வு தொடர்பான வழிகாட்டுதலும், அதன் விதிமீறல் மற்றும் முறையற்ற வணிகம், நுகர்வோருக்கு சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளும் தொடர்ந்து ஆராயப்படு மாகையால், இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எதிர்காலத்தில் முழுமை யான விழிப்புணர்வு பெற்ற நுகர்வோர்களாக திகழ்வா ர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News