உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் ரூ.20 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கோவில் நிலம் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2023-07-14 08:34 GMT   |   Update On 2023-07-14 08:34 GMT
  • நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர்.
  • கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான 90 சென்ட் நிலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது.

இந்த நிலத்தை சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்யாமல் இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் ஊழியர்கள் வந்தனர்.

அவர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி. மூலம் அதிரடியாக அகற்றிமீட்டனர். மேலும் அங்கிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News