புதுச்சேரி

போலீசார் செல்போன் ஒப்படைத்த காட்சி.

காரைக்கால் நெடுங்காட்டில் பொதுமக்கள் தவறவிட்ட 2 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

Published On 2023-10-13 09:02 GMT   |   Update On 2023-10-13 09:23 GMT
  • விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.
  • நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

புதுச்சேரி:

காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி, புகார் தரும் நபர்களிடம் விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன், நெடுங்காடு பகுதியில், இருவர் தங்களது செல்போன்களை தவறவிட்டனர்.

இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள், நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர், சி.ஐ.இ.ஆர்.போர்ட்டல் ஆப் மூலம் தொலைந்து போன செல்போன் எண்களை வைத்து அதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்பைடைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News