உள்ளூர் செய்திகள்

எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - முதல்-அமைச்சருக்கு சமூகஆர்வலர்கள் மனு

Published On 2023-02-13 16:22 IST   |   Update On 2023-02-13 16:22:00 IST
  • நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
  • ரோட்டரி மின்மயான அறக்கட்டளை மூலம் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் நவீன மின்மயானம் அமைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ரோட்டரி மின்மயான அறக்கட்டளை மூலம் கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிலர் அந்த நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் 8-வது வார்டு பச்சாபாளையத்தில் நீரோடை உள்ள பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பு உள்ளிட்ட தன்னார்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுகுறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள மனுவில்,பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில், ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் சுமார் 4 கோடி ரூபாயில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சிலர் அந்த நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் 8-வது வார்டு பச்சாபாளையத்தில் நீரோடை உள்ள பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அந்த இடம் நீரோடை பகுதியாக உள்ளது. மேலும் அந்த பகுதியில் ரேசன் கடை, தனியார் பள்ளி உள்ளது. வாகனங்கள் செல்வதற்கு சரியான வழித்தடமும் இல்லை.

ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலை கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் ஏற்கனவே மின்மயான திட்டம் செயல்பட்டு வருகின்ற வேளையில் புதிதாக இன்னொன்று அமைப்பது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்.

ஏற்கனவே பல்லடம் நகராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரமில்லாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு திட்டங்கள் தேவைதானா என்று மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையில், அரசு எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News