உள்ளூர் செய்திகள்
திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் தேரோட்டம்
- திருத்தேரில் சுவாமி வீதி உலா சென்றபோது பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- நாளை மறுநாள் தெப்போற்சவ விழா நடக்கிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமாக , நேற்று தேர்திருவிழா கோலகலமாக நடைபெறறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருத்தேரில் சுவாமி வீதி உலா சென்றபோது பக்தர்கள் வீதியின் இருபுறமும் திரண்டு நின்று தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் (மே.13ம் தேதி) தெப்போற்சவ விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது.