உள்ளூர் செய்திகள்
வாரச்சந்தை கடை முன்பு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான தற்காலிக வாரச்சந்தை கடைகள் இயங்கி வரு கிறது. இதில் ஒரு கடையின் முன்பு ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தூக்கில் தொங் கியவர் சோளிங்கர் கணபதி முதலி தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி முகமதுஅலி என்பது தெரிய வந்தது.
இவர் தற் கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.