உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் முனிரத்தினம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த காட்சி.

சோளிங்கரில் 13-ந் தேதி நடைபயண யாத்திரை

Published On 2022-08-07 14:16 IST   |   Update On 2022-08-07 14:21:00 IST
  • சுதந்திர தின விழாவையொட்டி நடக்கிறது
  • தமிழக காங்கிரஸ் தலைவர் ேக.எஸ்.அழகிரி தொடங்கி வைக்கிறார்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா முன்னிட்டு நடை பயணம் யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், மாவட்டச் செயலாளர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற 13-ந் தேதி அன்று 75-ம் ஆண்டு சுதந்திர தின பவள விழா முன்னிட்டு நடைபயணம் யாத்திரை நடைபெற உள்ளது.

இந்த யாத்திரையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த யாத்திரையில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், நகர பேரூர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த யாத்திரை சிறப்பாக நடைபெற அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்எ ன கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News