ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா கடற்படை துணைத் தளபதி கிழக்கு பிராந்திய தலைவர் சஞ்சய் வத்சயன் பங்கேற்ற காட்சி.
அரக்கோணத்தில் ஹெலிகாப்டர் பைலட்டுக்கான பயிற்சி நிறைவு விழா
- 22 வாரங்களாக பயிற்சி நடந்தது.
- 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு சான்றிதழ்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஐ.என்.எஸ் . ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் கடந்த 22 வாரங்களாக பயிற்சிமேற்கொண்ட 98 - வது கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அங்குள்ள வளாகத்தில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கடற்படையின் கிழக்கு பிராந் திய துணை தளபதி சஞ்சய் வத்சயன் கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பயிற்சி முடித்த 7 கடற்படை ஹெலிகாப்டர் விமானிகளுக்கு சான்றிதழ்களையும், பயிற்சியில் அனைத்து பிரிவுகளிலும் முத லிடம் பிடித்த பயிற்சி விமா னிக்கான பிளாக் ஆபீசர் கமாண்டிங் இன் சீப், கிழக்கு பிராந்திய கடற்படை கமாண்ட் ரோலிங் சுழற் கோப்பை வம்சி காஷ்முக்கு வழங்கப்பட்டது.
சப் லெப்டினன்ட் குண்டே நினைவுப் புத்தகப் பரிசு, புனித் வம்சி கைஷிங்கிற்கும் ஒட்டுமொத்த தகுதி வரிசையில் முதலிடம் பிடித்ததற்காககேரள ஆளுநர் ரோலிங் சுழற்கோப்பை எஸ் . வம்சிதிரிஷ்னாவுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கடற்படையின் கிழக்கு பிராந்திய துணை தள பதி சஞ்சய் வத்சயன் பேசிய தாவது:-
நமது கடற்படை பல ஆண்டுகளாக பொறுப்பான மற்றும் நம்பகமான படையாக வளர்ந்துள்ளது.
இந்தோ பசி பிக் பிராந்தியத்தை நோக்கி ஒரு தனித்துவமான மாற்றத் தைக் கண்டுள்ளது. கடற் கொள்ளை , கடத்தல் மற்றும் மனிதர்கள் கடத்தல் போன்ற நாடு கடந்த குற்றங்களின் அதிகரிப்பு மற்றும் நடந்து கொண்டிருக்கும் பொருளா தார அதிகார போராட்டம், ஸ்திரத்தன்மை மற்றும் ஊடு ருவல் போன்றவை சுதந்தி ரத்தை அச்சுறுத்தும் வகை யில் , கடல்சார் களம் அதிக ரித்து வருகிறது.
இந்தியக் கடற்படை , குறிப் பாக கடற்படை விமானப் படை எந்த சவாலுக்கும் பதிலளிக்கும் வகையில் தயா ராக உள்ளது. இந்த ஆண்டு கடற்படையானது முழு அளவிலான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கி லாந்து, ஜப்பான், ஆஸ்திரே லியா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேசியா, ஓமன் மற்றும் ஐக்கிய அமிரகம் உள் ளிட்ட நாடுகளுடன் பல இருதரப்பு பயிற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
பயிற்சி பெற்ற பைலட்டுகளுக்கு , கடலுக்குமேல் ஹெலி காப்டர் இயக்குதல், இரவு நேரத்தில் இயக்குதல் போன்ற கடினமான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பணியில் சிறந்து விளங்குவர்.
நாட்டின் பாதுகாப்பு பணியில் இவர்கள் பணி முக்கியத்துவம் மிகுந்ததாக உள்ளது. பயிற்சி நிறைவு செய்த விமானிகளை நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்பேசினார்.