உள்ளூர் செய்திகள்
மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதம்
- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
- நிவாரணம் கிடைக்க வலியுறுத்தல்
நெமிலி:
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வேட்டாங்குளம் கிராமத்தில் சின்னதெருவில் வசித்து வரும் வடிவேல் (வயது 40). என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் வடிவேல், அவரது மனைவி, 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக நெமிலி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், வேட்டாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் நிரோஷா பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மீட்டு மாற்று இடத்தில் தங்க ஏற்பாடு செய்தனர்.
மேலும் மழை பாதிப்பு நிவாரணம் கிடைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் வருவாய் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.