உள்ளூர் செய்திகள்

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி சாவு

Published On 2022-06-22 10:52 GMT   |   Update On 2022-06-22 10:52 GMT
  • அரக்கோணத்தில் பலத்த மழை
  • ஒரு மணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

அரக்கோணம்:

அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருவரா ஜப்பேட்டை பள்ளிக்கூட மேட்டுத்தெரு பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மனோகரன் அவரது தாய் அலமேலுடன் (89) வசித்து வந்தார். தொடர் மழை காரணமாக வீட்டின் மேற்கூரை (ஓட்டு வீடு) நள்ளிரவில் இடிந்து விழுந்தது. அலமேலு படுத்திருந்த கட்டிலின் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் இடிபாடுக்குள் சிக்கி இறந்தார்.

இதுகுறித்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூதாட்டி உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் போராடி மூதாட்டி உடலை மீட்டனர். அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News