ரெயில் நிலையத்தில் வாலிபரை வெட்டிய முயன்ற போது எடுத்த படம்.
ரெயில் நிலையத்தில் புகுந்து வாலிபரை வெட்டியவர் கைது
- முன்விரோத தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் திரு வாலங்காடு அரிச்சந்திரா புரத்தை சேர்ந்தவர் இர்பான் (வயது 20).
இவர், திருவாலங் காடு ரெயில் நிலையம் பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, அரக்கோணம் பழனி பேட்டை பகுதியை சேர்ந்த மூர்த்தி (20) என்பவர் ரெயில் நிலையத்திற்குள் புகுந்து முன்விரோதம் காரணமாக இர்பானை தகாத வார்த்தையால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் தலையில் வெட்டி யதாக கூறப்படுகிறது.
இதில் இருப்பானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த இர்பானை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
ரெயில்வே போலீசார் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.