உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலையடிவாரத்தில் இருக்கும் சுகாதார நிலையம் பூட்டி கிடக்கும் காட்சி.

பூட்டியே கிடக்கும் சுகாதார அலுவலகம்

Published On 2022-10-09 14:58 IST   |   Update On 2022-10-09 14:58:00 IST
  • சோளிங்கர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி
  • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சோழிங்க நகராட்சியில் உள்ள கொணடபாளையத்தில் ஒரே குன்றிலான பெரியமலையில் ஸ்ரீ யோக நரசிம்மர் கோவில் 1305 படிகளும் அருகே உள்ள சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் கோவில் 406 படிகள் கொண்டது.

கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் 30 நாட்கள் பக்தர்கள் விரதம் இருக்கின்றனர் இதை ஒட்டி தினசரி காலையும் மாலையும் மலைக்குச் சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.

இந்த நிலையில் பெரிய மலை அடிவாரத்தில் கோவில் அருகே பக்தர்கள் பயண்பாட்டிற்காக சுகாதாரம் வளாகம் கட்டப்பட்டு பக்தர்களுக்கு பயண்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த சுகாதார வளாகம் மூடப்பட்டுள்ளது.இதனால் வெளி ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதனால் நகராட்சி நிர்வாகம் பக்தர்கள் நலனுக்காக சுகாதாரம் வளாகம் உடனடியாக திறக்க வேண்டும் என பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News