உள்ளூர் செய்திகள்

பிரமாண்டமாய் காட்சியளிக்கும் முருகர் சிலை.

கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-07 16:10 IST   |   Update On 2022-07-07 16:10:00 IST
  • பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மலேசிய முருகர் சிலை
  • பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்.

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஸ்ரீ வள்ளி தெய்வானை ஐயப்பன் மற்றும் மலேசிய முருகன் கோவில் அமைந்துள்ளது.

கும்பாபிஷேகத்தில் மகாதேவமலை சித்தர் மற்றும் ரத்தினகிரி சாமிகள் சித்தஞ்சி சிவ காளி பீட சாமிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

இதில் வேடந்தாங்கல் மகேந்திரவாடி புதுப்பட்டு ஆகிய சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு புஷ்பவனம் குப்புசாமி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

Tags:    

Similar News