கோப்புப்படம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 10-ந்ேததி போராட்டம்.
- விண்ணப்பங்கள் தேங்கி நிற்கின்றது.
- ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
அரக்கோணம்:
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை நிலையச் செயலாளரும் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான பாலமுருகன் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த காலங்களில் தங்கள் தேவைகளுக்கான கோரிக்கைகளை ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கொடுத்த நிலையில் இன்று வரை விண்ணப்பங்கள் தேங்கி நிற்கின்றது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட பொழுது எந்த ஒரு சரியான பதிலை கூறாமல் ஆசிரியர்களை அலைக்கழித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இரண்டு ஆண்டு காலமாக ஆசிரியர்கள் வீடு கட்டுவதற்கு துறைசார்ந்த அனுமதி பெற விண்ணப்பித்து இயக்குனர் அலுவலகத்திற்கு மாவட்ட கல்வி அலுவலத்திற்கு கோப்புகள் திருத்தப்பட்டன.
கோப்புகளை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் மீண்டும் முதன்மை கல்வி அலுவலர் வீடு கடன் அனுமதி கோரும் கோப்புகளை உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பி கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டாக கடன் பெறும் அனுமதி ஆணை கிடைக்காமல் ஆசிரியர்கள் அலைக்கழிக்க படுகின்றனர்.
இதைக் கண்டித்து துறை அனுமதி கோரி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கூட்டணியை அழைத்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாத நிலையில் வருகிற 10ந் தேதி மாலை 5 மணிக்கு அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் அலுவலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.