உள்ளூர் செய்திகள்

அர்ஜுன் சம்பத் உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்த காட்சி.

அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-05 14:00 IST   |   Update On 2022-07-05 14:00:00 IST
  • தொல் திருமாவளவனை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு
  • அர்ஜூன் சம்பத் கொடும்பாவி எரித்ததால் பரபரப்பு

அரக்கோணம்:

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை இழிவாக பேசியது கூறி அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரக்கோணம் நகர செயலாளர் அப்பல் ராஜ் தலைமை தாங்கினார் செயலாளர். சந்தர் முன்னிலை வகித்தனர், அர்ஜுன் சம்பதை தேச விரோத சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர், திருப்பெரும்புதூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் கவுதமன் கோபு, ராணிப்பேட்டை வடக்கு மாவட்ட செயலாளர் கவுதம், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மாறன், ஒன்றிய செயலாளர் நரேஷ், ஒன்றிய பொருளாளர் வஜ்ஜிரவேல், ஒன்றிய துணைச் செயலாளர் அருண், நகரச் துணை செயலாளர்கள் நாகராஜ், சம்பத், வேளாங்கண்ணி, உள்பட கட்சியின் நகர ஒன்றிய நிர்வாகிகள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மறைத்து வைத்திருந்த அர்ஜுன் சம்பத் உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

திடீரென போலீசார் உருவ பொம்மை மீட்க போராடிய போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News