அரக்கோணம் உட்கோட்ட இன்ஸ்பெக்டர்களுக்கான கூட்டம் நடந்த போது எடுத்த படம்.
கிரிமினல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
- இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. எச்சரிக்கை
- மயானகொள்ளை விழாவைெயாட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கிரண் சுருதி நேற்று அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ள முதல்முறையாக வந்தார். அரக்கோணம் ஏ.எஸ்.பி.கிரிஷ் யாதவ் அவரை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அரக்கோணம் உட்கோட்ட 12 காவல் நிலையத்திற்கான இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் பங்கு பெற்றனர்.
இதில் பொதுமக்கள் மீது காவல்துறைக்கு கூடுதலான அக்கறை இருக்க வேண்டும். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் கிரிமினல்கள் (சமூக விரோதிகள் மீது) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
வருகின்ற மயான கொள்ளை விழாவின் பொது சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.