உள்ளூர் செய்திகள்

வாராஹி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2023-06-09 15:36 IST   |   Update On 2023-06-09 15:36:00 IST
  • தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

நெமிலி:

நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று வைகாசிமாத தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பஞ்சமி திதி நாளன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சென்னை, பெங்களூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News