உள்ளூர் செய்திகள்

சோளிங்கரில் ரோப் கார் பணி அமைக்கும் இடத்தில் பக்தர்கள் தங்கும் வசதிகள் அடிப்படை வசதிகளை அமைச்சர் காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப் கார் பணி

Published On 2023-03-04 15:24 IST   |   Update On 2023-03-04 15:24:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
  • கோவில் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் 11 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் ரோப்கார் பக்தர்களுக்கான அடிப்படை வசதி கட்டுமான பணிகளை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டிடத்தின் நுழைவாயில் சிற்பங்கள், கட்டிடத்தின் மேற்கூரை அமைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார், பெரியமலையில் அமைய உள்ள மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்வு பாதை அமைப்பது குறித்தும்.சின்னமலை யோக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கோவில் புனரமைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். 

Tags:    

Similar News