கோப்புப்படம்
வாலாஜாவில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்: ஊராட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்.
- பணி நிமித்தமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயிலில் பயணம்.
- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிக் குழு சாதா ரணக் கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைமை இடத்துக்கு அருகில் வாலாஜா ரோடு ெரயில் நிலை யம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஆயிரக்கணக் கான மக்கள் அலுவல், தொழில் பணி நிமித்தமாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
எனவே வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில், தெற்கு ெரயில்வே சார்பில் இயக்கப்படும் அனைத்து விதமான ெரயில்களும் நின்று செல்ல வேண்டும்.
இது குறித்த தீர்மானத்தை மத்திய ெரயில்வே துறை அமைச் சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் தென்னக ெரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க மன்ற அங்கீகாரம் கோரப்பட்டது.
ஜூன் – 20-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்ட `புதிய கலெக்டர் அலுவலகம் திறக்க வருகை தரும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட ஊராட்சிக் குழு சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்க வேண் டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.