புதுடெல்லி ஜல்ஜீவன் மிஷன் திட்ட தலைமை அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்ட போது எடுத்த படம்.
அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் சாதனை
- தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது
- தேசிய அளவில் 3-ம் இடம் பிடித்தது கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு பாராட்டு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் சுரக்ஷா 2023 திட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 288 கிராம ஊராட்சிகளில் உள்ள 1.89,324 தனிநபர் இல்லங்களில் 2022 அக்டோபர் மாதம் முடிய பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் 1,88,320 வழங்கப்பட்டுள்ளது.
இது மாநில அளவில் 98.96 சதவீதம் ஆகும். தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்குவதில் ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திலும், அகில இந்திய அளவில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளது. 288 கிராம ஊராட்சிகளில் இன்று வரை 285 கிராம ஊராட்சிகளில் தனிநபர் குடிநீர் இணைப்பு முழுவ துமாக வழங்கப்பட்டுள்ளது.
தனிநபர் இல்ல குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதிலும் நீர் பரிசோதனை செய்வதிலும், வீடு தோறும் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதிலும் அகில இந்திய அளவில் 60 சதவீதம் விழுக்காடு ராணிப்பேட்டை மாவட்டம் 4 நட்சத்திர குறியீடுகள் பெற்று 2022 அக்டோபர் மாதத்தில் சாதனை பெற்றுள்ளது.புதுடில்லி ஜல்ஜீவன் மிஷன் திட்ட தலைமை அலுவல கத்திலிருந்து நேற்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தினில் அதிக அளவில் இலக்குகளை எய்தியதற்கு ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு மத்திய அமைச்சக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர் நரேந்திர சின்ஹா பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜி.லோகநாயகி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் ஆறுமுகம், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.