உள்ளூர் செய்திகள்

பலத்த காற்றுடன் மழை

Published On 2023-06-02 15:30 IST   |   Update On 2023-06-02 15:30:00 IST
  • மின் வயர் மீது முறிந்து விழுந்த மரங்கள்
  • அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதில் ராணிப்பேட்டை நகரத்தில்

நவல்பூர், முத்துக்கடை, ரெயில்வே ஸ்டேஷன் சாலை,ஒத்தவாடை தெரு உள்பட பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து மின்சார வயர்கள் மீது விழுந்தது.

இதில் மின்கம்பங்கள் சாய்ந்ததோடு மற்றும் மின் வயர்களும் சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நேற்று இரவிலேயே பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடனடியாக மரக்கிளைகளை அகற்றி மின் இணைப்பு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டடார்.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு, மின்சார வாரியம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது விழுந்திருந்த மரக் கிளைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் தீயணைப்பு, நகராட்சி, மின்சார வாரிய அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News