- மின்தடையை கண்டித்து நடந்தது
- தாசில்தார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே நெடும் புலி ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியில் உள்ள மின்மாற்றி திடீரென்று பழுதடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் நேற்று மாலைவரை மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மின்மாற்றியை பழுதுநீக்கி உடனடியாக மின்சேவை வழங்கவேண்டும் என்று மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் அதிகாரிகளோ பழுதை நீக்க 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளனர்.
இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள் பனப்பாக்கம் - அரக்கோணம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நெமிலி தாசில்தார் பால சந்தர், மின்துறை அலுவலர்கள் மற்றும் நெமிலி போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.