உள்ளூர் செய்திகள்
ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ விழா
- சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமான் சகாதேவ சித்தர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு மூலவர் சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மாலை நந்திபகவானுக்குபால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜை செய்து அருகம்புல் மாலை அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாட்டை பாண்டியநல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ஜெயகோவி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.