உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் திடீர் சோதனை

Update: 2022-08-15 09:15 GMT
  • சுதந்திர தினத்தையொட்டி கண்காணிப்பு தீவிரம்
  • மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர்

அரக்கோணம்:

சுதந்திரதின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாடெங்கும் பொது மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரெயில் நிலை யங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந் தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளையும், பார்சல் அலுவலகம், பயணிகள் காத்திருப்பு அறை ஆகியவற்றிலும் ரெயில், தண்டவாளங்கள் மற்றும் ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News