உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-04-13 09:11 GMT   |   Update On 2023-04-13 09:11 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு சார்பில் பணியாளர்கள் கொண்டு பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் என்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் கருமாரியம்மன் கோவில் கூட்டு சாலையில் இருந்து பஸ் நிலையம் வழியாக அண்ணா சிலை காந்தி ரோடு சென்று தபால் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில் பயண்படுத்தும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், உருஞ்சுகுழாய்கள் ஒழிப்போம், பிளாஸ்டிக் பொருட்கள் பயண்படுத்து வதை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக பிளாஸ்டிக் பயண்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியினையும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பையை பயண்படுத்துவோம் என உறுதி மொழி ஏற்றனர்.

இந்த பேரணியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தனியார் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News