உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
- முற்றிலும் எரிந்து சேதம்
- தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
அரக்கோணம்
அரக்கோணம் பஜார் தோல் ஷாப் பகுதியி–ல் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான பெட்டிகடை ஒன்று இருந்தது. இந்த கடைக்கு மர்ம நபர்கள் நேற்று இரவு தீ வைத்துள்ளனர்.
தீ மளமளவென எரிந்து கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடைக்கு தீ வைத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.