உள்ளூர் செய்திகள்
தூய்மை பணி செய்த காட்சி.
தூய்மை பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.
- என் குப்பை என் பொறுப்பு என்று வாசகம்
- சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த நோட்டிசுகள் அகற்றம்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு தூய்மை பணி செய்யும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் பொறுப்பு பழனி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பஸ் நிலையத்தில் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ஒட்டிகளை அகற்றி அங்கிருந்த குப்பைகளை தூய்மை செய்து பணியை துவக்கி வைத்தார்.
மேலும் இதில் நகராட்சி ஆணையர் பரந்தாமன் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர் எபினேசன் ஜெயராமன் காங்கிரஸ் நகர தலைவர் கோபால் மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.