உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து மெக்கானிக் தற்கொலை
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை
- மதுபான கடை அருகே பிணமாக கிடந்தார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள புளியங்கண்ணு திருவள்ளு வர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 40). மோட் டார் சைக்கிள் மெக்கானிக் காகவேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெய் சங்கர் பின்னர் வீடு திரும்ப வில்லை.
இந்தநிலையில் அவர் புளியந்தாங்கல் பக்கத் தில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதபரி சோதனைக்கு அனுப்பிவைத் தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.