உள்ளூர் செய்திகள்
பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது
- போலீசார் சோதனையில் சிக்கினார்
- 520 பாட்டில்களை பறிமுதல்
காவேரிப்பாக்கம்:
ஒச்சேரி அருகே மாமண்டூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பதாக அவளூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் அரசு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த, கடையின் உரிமையாளரான மாமண்டூரை சேர்ந்த குட்டி என்பவரை கைது செய்தனர். மேலும் ரூ.67 ஆயிரம் மதிப்பிலான 520 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.