உள்ளூர் செய்திகள்
பைக் மீது லாரி ேமாதி தொழிலாளி பலி
- அம்மூர் பகுதியை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
வாலாஜாபேட்டை:
வாலாஜாவை அடுத்த அம்மூர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 50). கூலித் தொழிலாளி.
இவர் வாலாஜா டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றார்.
அப்போது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமநாதனை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச் சைக்காக வேலூர் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.