சோளிங்கர் நகராட்சியில் குடிநீர் தொற்று பரவாமல் இருக்க குளோரின் நவீன எந்திரத்தை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
சோளிங்கர் நகராட்சியில் ரூ. 9.30 லட்சத்தில் குடிநீரில் தொற்று பரவாமல் இருக்க நவீன எந்திரம்
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகளில் 236 தெருக்களும் 33900 மக்கள் தொகை உள்ளனர். சுத்தமான குடிநீர் வழங்க பொதுநிதியில் இருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் குடிநீரில் தொற்று கிருமி நீக்க குளோரின் சேர்க்கை நவீன எந்திரத்தை தொடங்கும் நிகழ்ச்சி நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
நகராட்சி துணைத் தலைவர் பழனி, நகராட்சி ஆணையர் பரந்தாமன், நகராட்சி உறுப்பினர்கள் டி.கோபால், அசோகன், அருண்ஆதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகராட்சியின் பொதுநிதியில் இருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் குடிநீரில் தொற்று கிருமி நீக்க குளோரின் சேர்க்க நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் இளநிலை உதவியாளர்கள் எபினேசன் ஜெயராமன் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அன்பரசு, கணேசன், ஏழுமலை, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.