உள்ளூர் செய்திகள்

மருத்துவமனை பணியாளர்கள், கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகத்தை கலெக்டர் வளர்மதி வழங்கிய காட்சி.

மருத்துவமனை பணியாளர்கள், கர்ப்பிணிகளுக்கு சுகாதார பெட்டகம்

Published On 2023-05-24 15:08 IST   |   Update On 2023-05-24 15:08:00 IST
  • இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் நடந்தது
  • கலெக்டர் வளர்மதி வழங்கினார்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் சார்பில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 100 மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகாதார பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சுகாதார பெட்டகங்களை வழங்கி ேபசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை பணியாளர்களின் ேசவை மிகவும் போற்றுதலுக்குரியது. தூய்மைப் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தன் சுத்தம் கடைபிடிப்பதையும் பின்பற்றுவதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் மாறிவரும் இந்த நவீன யுகத்தில் தன் சுத்தம் பேணுதல்.

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

பள்ளிக் குழந்தைகளுக்கு அடிக்கடி கைகள் கழுவுவதை பழக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக பெண்கள் வலிமைமிக்க நோயான புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

ேமலும் ஆரோக்கியமாக வாழ விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் இன்று வழங்கும் இந்த சுகாதாரப் பெட்டகத்தினை பயன்படுத்தி தொடர்ந்து தங்கள் சுத்தத்தை பேணிக்காக்க முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி, இந்தியன் ரெட் கிராஸ் சங்க அவைத்தலைவர் பொன்.சரவணன், மாவட்ட செயலாளர் ரகுநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.உஷா நந்தினி உள்பட ரெட் கிராஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News