- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை
அரக்கோணம்:
அரக்கோணம் பழனி பேட்டையில் தினத்தை முன்னிட்டு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ரமேஷ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் ஆன்லைன் தொழிற்சங்க கல்வியை உருவாக்கிடவும், நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் சார்பாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், ஒரு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மாதவன் நன்றி கூறினார்.