- அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்தது
- 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா, அன்னை மருத்துவமனை மற்றும் அன்னை பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அம்பேத்கர் மன்ற செயல் தலைவர் அருள்மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், மன்ற தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
டாக்டர் ஸ்வப்னா மேற்பார்வையில் பல், மற்றும் கண் பரிசோதனை ரத்த கொதிப்பு பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த வகை கண்டறிதல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதயம் மற்றும் எலும்பு நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
ஓய்வு பெற்ற போலீஸ் டோமினிக் சேவியோ, டவுன் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, கிருஷ்ணா கல்வி குழும செயலாளர் ரவிக்குமார், அரசு மருத்துவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் ரவி நன்றி கூறினார்.