உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் கால்பந்து போட்டி
- சு.ரவி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் அறிவிப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி தொடக்க விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை பெங்களூர் பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்க உள்ளது.
கால்பந்து போட்டியை ரவி எம் எல் ஏ தொடங்கி வைத்தார். இதில் அம்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் அரக்கோணம் அதிமுக நகர செயலாளர் பாண்டுரங்கன் மற்றும் பலர் உடன் இருந்தனர் .
கால்பந்து விளையாட்டு போட்டி நிர்வாகிகள் ஜெயசீலன், எட்வின், ராஜேஷ் மற்றும் கில்பட், பாண்டியன் ஆகியோர் கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.