முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்
- அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை.
- 30-ந் தேதி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சருமான காந்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கு தமிழக அரசின் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்திட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். நாளை 28ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் வாலாஜா டோல்கேட் வருகிறார்.
அவருக்கு மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகிய எனது தலைமையில் மாபெரும் எழுச்சிமிகு வரவேற்பு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறப்பாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே திராவிட மாடல் ஆட்சிக் காணும் தமிழக முதல்வருக்கு சிறப்பாக வரவேற்க மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவரணி, மகளிரணி, இலக்கிய அணி, தொண்டரணி, வழக்கறிஞரணி, விவசாய அணி, வர்த்தகரணி, நெசவாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மை நலப்பிரிவு, மருத்துவரணி, பொறியாளர் அணி, விவசாய தொழிலாளரணி, மகளிர் தொண்டரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணியினர், தொ.மு.ச மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் 30-ந் தேதி வியாழக்கிழமை அன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.
எனவே பொதுமக்களும், பயனாளிகள் பெரும் திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.