உள்ளூர் செய்திகள்
லியோ படத்தை கொண்டாடிய ரசிகர்கள்
- பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ஸ்ரீதேவி மற்றும் சிந்து ஆகிய 2 திரையரங்கில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.
இந்நிலையில் லியோ திரைப்படம் திரையிடப்படுவதை முன்னிட்டு 400-க்கும் மேற்பட்ட. ரசிகர்கள் தியேட்டரின் முன்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க நடனமாடினர்.
விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் காந்தி ராஜ் முன்னிலையில் விஜய் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து பூமாலை தூவி கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.