உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
கொடைக்கல் திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
- கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 500-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஜூலை.4 கொடைக்கல் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கட்டைக் கூத்து கலைஞர்கள் மகாபாரதத்தை நினைவு கூறும் வகையில் நடித்துக்காட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம். முனிரத்தினம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். 10-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார் கள்.