உள்ளூர் செய்திகள்
- நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்
- கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் வருகிற 20-ந் தேதி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.