உள்ளூர் செய்திகள்
பறக்கும் காவடியில் அம்மனுக்கு மாலை அணிவித்த பக்தர்கள்
- ஆடி மாத திருவிழாவையொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இதில் இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் காலையில் அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதியம் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது மாலை நேரத்தில் இளைஞர்கள் அலகு குத்தியும் முதுகில் முல்குத்தி வண்டி இழுத்தல் மற்றும் அந்தரத்தில் தொங்கியபடி ஆகாய மாலை அணிவித்தல் போன்ற நேர்த்திக் கடனை செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.