உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய கட்டிட பணிகளை டி.ஜி.பி. ஆய்வு
- ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
- குடியிருப்பு வளாகத்தையும் பார்வையிட்டார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலையம் ஆர்.எஸ்.ரோட்டில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராணிப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி தற்போது பணிகள் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
கட்டி முடிக்கப்பட்ட புதிய தீயணைப்பு நிலையத்தினை தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதி வாரிய கழக டி.ஜி.பி. விஸ்வநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இதன் அருகில் 14 ஆயிரத்து 454 சதுரடியில் ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் லஷ்மி நாராயணன், உதவி மாவட்ட அலுவலர்கள் திருமுருகன், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.