உள்ளூர் செய்திகள்
கொட்டும் மழையில் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
கொட்டும் மழையில் காங்கிரசார் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
- ஊர்வலமாக சென்றனர்
- ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நடந்தது
அரக்கோணம்:
ராகுல்காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து அரக்கோணத்தில் கொட்டும் மழையில் ஊர்வலமாக சென்று தீ பந்தத்துடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜவகர் பால் மஞ்ச் தலைவர் நரேஷ் குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அைழப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாந்த், முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வந்தமண் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இவர்கள் அரக்கோணம் காமராஜ் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் இளைஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.