கோட்டாட்சியர் பாத்திமா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய காட்சி.
10, 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
- 10, 12-ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பாராட்டு
- பள்ளியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்
அரக்கோணம்:
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கருடா சாட்டர்பிள் டிரஸ்ட் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆதிதிராவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 10-ம் மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மேலும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியை சுற்றி 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் பழனி ராஜன், அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, பாரிஅரக்கோணம் வழக்கறிஞர் சங்கத் தலைவர்
லோகபிராமன், திருமலை, 29 வது வார்டு கவுன்சிலர் நந்தாதேவி, பழனி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது அலி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.