உள்ளூர் செய்திகள்

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் பிளாஷ்டிக் அரவை எந்திர மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையத்தில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-09-09 14:45 IST   |   Update On 2022-09-09 14:45:00 IST
  • சாலை பணியின் தார் அளவு குறையும்
  • 36 ஊராட்சிகளில் இருந்து 1097 கிலோ அனுப்பட்டது

வாலாஜா:

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை 60 மைக்ரான் வரை அரவை எந்திரம் மூலம் அரைத்து நெகிழி துகள்களை சாலை பணிக்கு பயன்படுத்துகின்றனர்.

இந்த நெகிழி அரவை எந்திரம் மையத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டிய இன்று ஆய்வு ெசய்தார்.

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து ஒரு கிலோவிற்கு ரூ.8 வீதம் பெற்று அதனை தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள பிளாஸ்டிக கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்ப படுகிறது.

நெகிழி கழிவு மேலாண்மை அலகில் ஊராட்சிகளில் இருந்து ரூ.10 வீதம் பெற்றுகொள்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகள் சுத்தம் செய்த பின் எந்திரம் கொண்டு பிளாஸ்டிகளை அரவை செய்த பின் சாலை அமைக்கும் பணிக்காக சம்மந்தப்பட்ட ஒப்பந்தாரருக்கு ரூ.30 வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வரை வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 36 ஊராட்சிகளில் இருந்து 1,356 கிலோ பிளாஸ்டிக் ரூ.10,848 பெறப்பட்டு அதனை தென்கடப்பந்தாங்கல் நெகிழி அலகிற்கு 1097 கிலோ அனுப்பட்டது.

அதனை ரூ.10,970 தொகை கொடுத்து பெறப்பட்டது. சாலை அமைக்கும் பணிக்காக சுமார் 440 கிலோ நெகிழி துகள்களை அரவை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சாலை பணிக்காக 240 கிலோ ரூ.7,200 விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ மீட்டர் 3.75 மீட்டர் அகலம் கொண்ட தார் சாலைக்கு 438 கிலோ நெகிழி தேவைப்படும். இதனால் ஏற்கனவே பயன்படுத்தப்படும் தார் அளவு 6 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின் போது ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் லோகநாயகி, தாசில்தார் ஆனந்தன், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, ஊராட்சிமன்ற துணை தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News