உள்ளூர் செய்திகள்

சிப்காட் பகுதியில் உள்ள ரேசன் கடையில் கலெக்டர் வளர்மதி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2023-02-17 09:58 GMT   |   Update On 2023-02-17 09:58 GMT
  • பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்
  • ஏதேனும் குறையிருந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி ராணிப்பேட்டை, சிப்காட் பெல், அண்ணா நகர் பகுதி ரேசன் கடை, சிப்காட் நரசிங்கபுரம் மற்றும் ராணிப்பேட்டை நகராட்சி பாரதி நகர் ஆகிய 4 ரேசன் கடைகளில் திடீரென சென்று பார்வையிட்டார். பின்னர் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு அளவினை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து ரேசன் கடைகளுக்கு வருகை தந்திருந்த பொது மக்களிடம் பொருட்கள் முறையாக கிடைக்கின்றதா? பொருள்கள் தரம் எவ்வாறு உள்ளது என கேட்டதற்கு பொருட்கள் கிடைக்கின்றது.

கோதுமை போதிய அளவில் கிடைக்க பெறுவதில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கோதுமை அளவு ஒவ்வொரு கடைக்கும் இருக்கின்றதா என்பதை அறிந்து அதனை உடனடியாக பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் ரேசன் கடைகளில் இலவச வேட்டி மற்றும் சேலை இருந்ததை பார்த்து உடனடியாக குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்திட உத்தரவிட்டார். ஏதேனும் குறையிருந்தால் உடனே தெரிவிக்கலாம் என்று கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

தொடர்ந்து ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, விற்பனை குறித்து, கைபேசி எண் வாயிலாக அறிந்து, பொருட்களின் இருப்பு எடையை அளவிட்டுப் சரி பார்த்து உறுதிப்படுத்தினார்.

இந்த ஆய்வின் போது வாலாஜா தாசில்தார் நடராஜன் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News