உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

Published On 2023-05-25 13:26 IST   |   Update On 2023-05-25 13:26:00 IST
  • கொடி மரத்துக்கு கலசபுனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை
  • வருகிற 30-ந்தேதி தேர் திருவிழா

சோளிங்கர்:

சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள சோழபுரீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

இதனை முன்னிட்டு சோழபுரீஸ்வரர் கனககுஜம் அம்பாள், கங்காதேவி சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்,அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மங்கல வாத்தியங்களுடன் கொடி மரத்துக்கு கலசபுனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை செய்து நந்தி திருவுருவம் படத்துடன் கொடியேற்றப்பட்டு பிரமோற்சவம் தொடங்கியது. உற்சவ சுவாமிக்கும் கொடி மரத்திற்கும் கும்ப தீபாராதனை நடைபெற்றது.

உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் தனித்தனி வாகனத்தில் சோழபுரீஸ்வரர், கனககுஐம்பாள், கங்காதேவி சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள் வருகிற 30-ந் தேதி அன்று தேர் திருவிழா நடைபெறுகிறது.

Tags:    

Similar News