உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. 8 ஆண்டு சாதனை குறித்து தெருமுனை பிரசாரம் செய்த போது எடுத்த படம்.
பா.ஜ.க. 8 ஆண்டு சாதனை குறித்து தெருமுனை பிரசாரம்
- 8 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சி
- வளர்ச்சியைப் பற்றி விளக்கம்.
அரக்கோணம்:
அரக்கோணம் உப்புக்குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவுதலைவர் எஸ்.நீலகண்டன் தலைமை தங்கினார். நகரத்தலைவர் என்.வெங்கடேசன் முன்னிலையில் வகித்தார்.
இதில் 8ஆண்டுகள் ஆட்சி காலத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சியைப் பற்றியும் தெருமுனைப் பிரச்சாரத்தில் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார். நாராயணன், வேணுகோபால், அனைவரையும் வரவேற்றனர்.
மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் தனசேகரன், மாவட்ட செயலாளர் ரகுநாத் சிறப்புரையாற்றினார். இறுதியில் நகர பட்டியலின தலைவர் ரவி ஜி, பார்த்திபன் நன்றி கூறினர்.