உள்ளூர் செய்திகள்

பால்குட ஊர்வலம் எடுத்து சென்ற பெண்கள்.

திரவுபதி அம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

Published On 2022-08-01 15:10 IST   |   Update On 2022-08-01 15:10:00 IST
  • 500 பெண்கள் கலந்து கொண்டனர்
  • கொட்டும் மழையிலும் நனைந்து பக்தர்கள் வழிபாடு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் 25 ம் ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு 9 நாள் ஆறுபடை முருகர் புனித யாத்திரை நிகழ்சி நேற்று இரவு நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு திரவுபதி அம்மன் கோவிலில் ஸ்ரீ முருகர் மற்றும் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.

பின்னர் நேற்று இரவு மாந்தாங்கல் கிராமத்தின் அருகே இருக்கும் கன்னியம்மன் கோவிலில் இருந்து பம்பை மேல தாளத்துடன் மற்றும் வான வேடிக்கையுடன் 500-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பால் குடத்தை தலையில் சுமந்தபடி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக நனைந்தபடியே கோவிலை வந்தடைந்தனர்.

கோவில் முழுவதும் ஊர்வலமாக சுற்றி வந்த பின்னர் கருவறையில் இருக்கும் முருகர் மற்றும் திரவுபதி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும் இந்த ஒன்பது நாள் கொண்ட ஆறுபடை புனித யாத்திரையில் பங்கேற்ற ஊர் கிராம பொதுமக்கள் மாலை அணிவித்த பெண் பக்தர்கள் என ஏராளமான பக்தர்களுக்கு திரவுபதிஅம்மன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு 11 மணிக்கு ஆறுபடை புனித யாத்திரை புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாந்தாங்கல் மோட்டூர் ஸ்ரீ திரவுபதி அம்மன் ஆலய ஆறுபடை முருக பக்தர்கள் விழாக் குழுவினர் பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News