பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா வரும் 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.விழாவை முன்னிட்டு 'என் மண் என் தேசம்'என்னும் தலைப்பில் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளுதல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கடந்த 9-ந்தேதி முதல் வரும் 15-ந் தேதி மேற்கொள்ளப்பட உள்ளது.
நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார்.செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் தீபிகா முருகன் வரவேற்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் நரசிம்மன், அருண்மொழி, மணிமேகலை, இந்திரா, பேரூராட்சி அலுவலர்கள், மகளிர் குழுவினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.