உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
அரக்கோணத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- “என் குப்பை என் பொறுப்பு” என்று வாசகம்
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ராணிப்பேட்டை:
அரக்கோணம் நகராட்சியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளான நேற்று அரக்கோணம் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக என் குப்பை என் பொறுப்பு என்ற வாசகங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சைக்கிள் பேரணியை அரக்கோணம் நகரமன்ற தலைவர் லட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தாசில்தார் பழனிராஜன், நகராட்சி ஆணையர் லதா துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம், நகரமன்ற உறுப்பினர் கே.எம்.பி.பாபு, துரை.சீனிவாசன், அரக்கோணம் வியாபாரி சங்கத் தலைவர் அசோகன், சமூக ஆர்வலர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.